முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 9 மே, 2013

நாமக்கல் மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர் பணியிடம் மே 20ம் தேதி முதல் "இன்டர்வியூ'

நாமக்கல்: "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, 685 பேரிடம் இருந்து விண்ணப்பம் வரப்பெற்றுள்ளது. அவர்களுக்கு, மே, 20ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு நடக்கிறது' என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், உடற்கல்வி ஆசிரியர் ஒன்பது, கலை ஆசிரியர் (ஓவியம்), 13, கம்ப்யூட்டர் பயிற்றுனர் இரண்டு, தையல் ஆசிரியர் ஐந்து, இசை ஆசிரியர் இரண்டு என மொத்தம், 31 காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதற்கு, தகுதி வாய்ந்த நாடுனர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளது. உடற்கல்வி ஆசிரியர், 153, கலையாசிரியர் (ஓவியம்), 138, தையல் ஆசிரியர், 65, இசை ஆசிரியர் ஏழு, கம்ப்யூட்டர் பயிற்றுனர், 322 பேர் என மொத்தம், 685 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு, மே, 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு நடக்கிறது. அதன்படி, மே, 20ம் தேதி, உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மே, 21ம் தேதி, ஓவிய ஆசிரியர், மே, 22ம் தேதி, தையல் ஆசிரியர், மே, 22ம் தேதி, இசை ஆசிரியர், மே, 22, 23ம் தேதி, கம்ப்யூட்டர் பயிற்றுனர் ஆகியோருக்கு, நேர்முகத்தேர்வு நடக்கிறது. விண்ணப்பித்துள்ள நபர்கள் அனைவருக்கும், நேர்முகத்தேர்வுக்கான கார்டு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks - Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக