பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காலியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் தேர்வு செய்யப்பட உள்ள சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காலியிடங்கள் தொடர்பாக பதிவு தாரர்கள் பட்டியல் www.virudhunagar.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலில் பதிவுதாரர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 15,16 ஆகிய நாள்களில் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். அப்போது உடன் கல்வித் தகுதி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவைகளை கொண்டு வர வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாள்களுக்கு பின்பு வருகின்றவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் பரிந்துரைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
Thanks - Dinamani
Thanks - Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக