சென்னையில் அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பேரணி, சென்ற 09.05.2013 வியாழன் அன்று நடைப்பெற்றது. பேரணியில் பல மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் பெருந்திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்.
பேரணி ஆர்.ஆர். ஸ்டேடியத்தில் துவங்கி லேண்ட்ஸ் வரை சென்றது. பேரணியில் பணிநியமனம் வழங்கிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பேரணி நிறைவில் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் அம்மாவிற்கு நன்றி அறிவித்தும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியும் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக