டலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பகுதி நேர ஆசிரியர்
பணிக்கு 27–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் ஜோசப்அந்தோணிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகர, நலத்துறை
நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி, நலத்துறை உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களை அரசின் இடஒதுக்கீடு கொள்கைப்படி, இன சுழற்சி வாரியாக நிரப்ப
உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி உடற்கல்வி–21, ஓவியம்–61, கணினி–6, தையல்–3, இசை–3,
வாழ்வியல் திறன்–2 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும்
தகுதியுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றும், கடலூர் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பணி நாடுநர்கள் வருகிற 27–ந்
தேதி மாலை 5 மணிக்குள், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கிடைக்க
தக்க வகையில், விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைத்திட
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களின் மாதிரி படிவம்,
கல்வித்தகுதி விவரம், கடலூர் முதன்மை கல்வி அலுவலக தகவல் பலகையிலும்,
விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டு இருக்கும்.
மேற்கண்ட தகவலை மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி ராஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினதந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக