கரூர்: தற்காலிக பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் நாளைக்குள் (27.04.2013) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளனர். தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளுக்கு கீழே குறிப்பிட்டவாறு பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் 6 பேர், கலை ஆசிரியர்கள் 5 பேர், கணினி ஆசிரியர்கள் 3 பேர் என 14 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவம் முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கையொப்பம் இட்டு நகல்களுடன் இதே அலுவலகத்தில் நாளை (27ம்தேதி) மாலை 5.45மணிக்குள் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக