நெல்லை: அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அந்தந்த
மாவட்டங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்படுகின¢றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதியம்
கிடைக்கும்.தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதி நேர
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம்
செய்யப்பட்டு கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, நேர்முகத்
தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.உடற்கல்வி
ஆசிரியர், பகுதி நேர ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர்
ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று
நாள் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டு
தொடக்கத்தில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள், அனைவருக்கும் கல்வி
திட்டத்தில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.தற்போது இந்த திட்டத்தில்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு காலியிடம்
உருவானது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்
அந்தந்த மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காதர் சுல்தான் கூறியிருப்பதாவது:
இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. நெல்லை மாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏப்ரல்
25ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்
ஏப்ரல் 27ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
நன்றி - தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக