மயிலாடுதுறை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட செம்பனார்க்கோவில், குத்தாலம், மயிலாடுதுறை ஆகிய ஒன்றியங்களின் பகுதிநேர ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 08.03.2014 சனிக்கிழமையன்று நடைப்பெற்றது.
இக்கூட்டதிற்கு தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜான்சன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
நாகை மாவட்ட செயல்தலைவர் எஸ்.முத்துராமன், மயிலாடுதுறை ஒன்றியத்தலைவர் திரு. எஸ். இதயச்சந்திரன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலர் திரு. ஸ்டாலின், மயிலாடுதுறை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். சாக்ரடீஸ், குத்தாலம் ஒன்றியத் தலைவர் என். சதீஸ், செம்பனார்க்கோவில் ஒன்றியத்தலைவர் மணிமாறன், செம்பை ஒன்றியச் செயலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்க வேண்டும். ஏப்ரல், மே மாத சம்பளப்படித்தம் செய்வதை கைவிட வேண்டும். நம் கோரிக்கையை ஆதரிக்கும் பிற சங்கங்களுக்கு நன்றியறிவித்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக