முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 12 மார்ச், 2014

தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை

தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.

இதையடுத்து தொடக்க நடுநிலை பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏப்ரல் 23, 24 மற்றும் 25ம் தேதிகள் பள்ளி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. அந்த 3 நாட்களை ஈடுகட்டும் விதமாக மார்ச் 22, ஏப்ரல் 5 மற்றும் 26ம் தேதிகளில் பள்ளிகள் செயல்படும். மேலும் மூன்றாம் பருவத் தேர்வை ஏப்ரல் 21, 22, 26, 28 மற்றும் 29ம் தேதிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவிரவும் ஏப்ரல் 30ம் தேதி பள்ளி வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக