முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 12 மார்ச், 2014

ஈரோடு மாவட்டப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி வட்டார பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு மொடக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கொடுமுடி வட்டார பகுதிநேர ஆசிரியர்கள் சங்க தலைவர் பூபதிராஜா முன்னிலை வகித்தார். இதில் மொடக்குறிச்சி வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், தலைவர் சதீஸ்குமார், துணைத்தலைவர் சுமதி, செயலாளர் கதிர்வேல், துணைச்செயலாளர் மோகனசுந்தரி, பொருளாளர் சரண்யா, துணைபொருளாளர் பூமதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியராக நியமனம் செய்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. தேர்வு விடுமுறை காலங்களில் சம்பளம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மொடக்குறிச்சி வட்டார அளவில் பகுதிநேர ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஓவிய ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.

நன்றி - தினதந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக