நாகை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கூட்டம், நாகை நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள ஓய்வூதியதாரர்கள் சங்கக்கட்டிடத்தில் 09.03.2014 ஞாயிறன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் திரு. ஆர். வெங்கட்ரமணி தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் திரு. யோகேந்திரன் முன்னிலை வகித்தார்.
வேதாரண்யம் ஒன்றியத் தலைவர் மற்றும் துணைச்செயலாளர் திரு. அருள் குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மண்டலத் தலைவர் திரு. கே. எம். ஜான்சன், மாவட்டத்தலைவர் திரு. ஜே. பாலமுரளி, மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு. காளிதாஸ், மாவட்டச்செயலாளர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் திரு. எஸ். முத்துராமன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் திரு. மாரியப்பன், நாகை ஒன்றியச்செயலாளர் திரு. கலைச்செல்வன், திருமருகல் ஒன்றிய துணைத்தலைவர் திரு. கலைச்செல்வன், கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் திரு. பெரியார்ச் செல்வன், திருமருகல் ஒன்றியச் செயலாளர் திரு. இளஞ்செழியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. முருகபாண்டியன், சிவக்குமார், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் திரு. இதயச்சந்திரன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் திரு. ஸ்டாலின் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய துணைச் செயலர் திரு. கோமகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து சிறப்பித்தனர்.
முடிவில் மாவட்டப் பொருளாளர் திரு. காளிதாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
முடிவில் மாவட்டப் பொருளாளர் திரு. காளிதாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக