முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 3 மார்ச், 2014

பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்க கோரிக்கை


By காஞ்சிபுரம்,

First Published : 03 March 2014 12:26 AM IST


பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். தமிழகத்தில் பணியாற்றும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் வறுமை பிடியில் சிக்கியுள்ளனர்.

எனவே அவர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்ச் 22-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில கோரிக்கை விளக்க மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்டச் செயலர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக