முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 1 மார்ச், 2014

தலைவர் சுந்தர்கணேஷ் சிறப்புரை ஆற்றிய பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஈ.கே.தினகரன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ப.முருகதாஸ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சுந்தர் கணேஷ் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஈ.சி.எஸ் மூலம் நேரடியாக வங்கியின் மூலம் மாத சம்பளம் வழங்க உத்தரவிட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்தல், வருகிற மார்ச் 16ல் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் முதல் மாநில மாநாடு மற்றும் கோரிக்கை விளக்க மாநாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொள்ளவேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் மாநில் மகளீரணி இணை செயலாளர் இளமதி நன்றி கூறினார்.

நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக