முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு மனு


திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. தா.பாண்டியன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அம்மனுவில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் : 

  1. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிடுமுறைக் காலத்தில் ஊதியம் வழங்கப்பட வில்லை.
  2. மற்ற ஆசிரியர்களைப் போல் கலந்தாய்வு மற்றும் பணியிடமாற்றம் இல்லை.
  3. பணிப்பதிவேடு பராமரிக்கப்பட வில்லை.
  4. குடும்ப நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சலுகைகள் இல்லை.
  5. ஊதியத்தை அவரவர் வங்கிக்கணக்கில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் அதே நாளில் செலுத்தப்படுவதில்லை.
  6. பொங்கல் கருணைத் தொகை வழங்கப்படுவதில்லை.
  7. பெண்களுக்கு பேறுகால விடுப்பு இல்லை. தற்செயல் விடுப்பு கூட அனுமதிக்கப்படுவதில்லை.
இக்குறைகள் களையப்பட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்று அக்கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக