முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 12 பிப்ரவரி, 2014

வேதாரண்யம் ஒன்றிய பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டம்

வேதாரண்யத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்கக் கூட்டம், வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக்கட்டிடத்தில் 09.02.2014 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு APSTA நாகை மாவட்ட துணைத்தலைவர் திரு. கே.எம். ஜான்சன் அவர்கள் தலைமை வகித்தார். நாகை மாவட்டப் பொருளாளர் திரு. கே. காளிதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு APSTA  நாகை மாவட்ட துணைச் செயலாளரும், வேதாரண்யம் ஒன்றியச் செயலாருமாகிய திரு. எம். அருள்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

APSTA மாவட்டச்செயலாளரும், மாநில செய்தித்தொடர்பாளருமாகிய திரு. எஸ்.முத்துராமன் அவர்களும், வேதாரண்யம் ஒன்றியப் பொருளாளர் திரு. எஸ். அன்பழகன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக