முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப்-2 தேர்வு

"உதவியாளர், குமாஸ்தா உள்ளிட்ட பணிகளில், காலியாக உள்ள, 2,269 இடங்களை நிரப்ப மே 18ல் போட்டி தேர்வு நடக்கும்" என அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள்,www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக