கோவை : பொங்கல் முடிந்து ஒரு வாரகாலமாகியும், கோவை மாவட்டத்தில்
ஆசிரியர்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட்ட போனஸ் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
அரசின் அறவிப்பின் படி கிரேடின் அடிப்படையில், "சி', "டி' பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஊராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், காப்பாளர்களுக்கு, பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பிரிவிற்கு ரூ. 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500ம் பொங்கல் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் போனஸ் வழங்குவதற்கு, மாநில அரசு 308 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்நிலையில், பொங்கலுக்கு முன்பு கிடைக்க வேண்டிய போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் பொங்கல் முடிந்து ஒரு வார காலமாகியும் இதுவரை, கோவை மாவட்டத்தில் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ""காரமடை, சுல்தான்பேட்டை ஆகிய இடங்களை தவிர, பிற வட்டாரங்களில் பொங்கல் போனஸ், பண்டிகை முன் பணம் கிடைக்கவில்லை. உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை கேட்டபோது, அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர். அதிகாரிகளின் மெத்தனபோக்கால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம், '' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக