திண்டுக்கல் : சனிக்கிழமை ஜனவரி 18, 2014
திண்டுக்கல் மாவட்டத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றியறிவித்து பேரணியாக திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் தொடங்கி தலைமைதபால் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.
பின்னர் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மனு அனுப்பினர். அம்மனுவில் குடும்பச் சூழல், பணிச் சூழல் ஆகிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ள நிலையையும், முழுநேர ஆசிரியர்களாக்கி முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக