முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 டிசம்பர், 2013

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மாநாடு - ஏற்பாடு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மாநாட்டிற்கான  ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 24.12.2013 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் செயலாளரை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்களின் சார்பாக சங்கத்தினர் மாநாடு நடத்த அனுமதி வேண்டி கடிதம் கொடுத்தனர்.


மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களை நேரடியாக சந்தித்து மனு கொடுத்தனர். 
  

இந்நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் நிறைவுற இருப்பதாகவும், ஆகையால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை எனவும் ஊதியம் கிடைக்காது எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இச்செய்திகள் வதந்திகளே! இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று பகுதிநேர ஆசிரியர்களின் இடுகைத்தளமான www.tapta79.blogspot.com வில் சங்கத்தின் மாநிலத்தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் ஆகிய இருவரும் இணைந்து ஒருமித்த அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக