முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 டிசம்பர், 2013

த.தொ.ப.ஆ கூட்டணி கொடுமுடி வட்டாரப் பொதுத் தேர்தல்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மூன்றாண்டுகளுக்கொருமுறை வட்டார, மாவட்ட, மாநிலப் பொதுத் தேர்தலை அமைப்பு விதிகள் மற்றும் தேர்தல் விதிகளின்படி நடத்துவதை நடைமுறையாகக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஒருசில மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதனால், இயக்கத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி முடிக்க மாநில அமைப்பு அறிவுறுத்தியுள்ளதால் கொடுமுடி வட்டாரத் தேர்தலை இன்று (30-12-2013) பிற்பகல் 3 மணிக்கு நடத்த ஈரோடு மாவட்டச் செயலாளர் திருமிகு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளராக மாவட்டப் பொருளாளர் திருமிகு ஆர்.தங்கராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கொடுமுடி வட்டாரக் கிளைத் தேர்தல் கொடுமுடி ஸ்ரீ சீதாலட்சுமி பாலிகா பாடசாலையில்  நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக