முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

எவ்வகை ஆசிரியராயினும் ஆசிரியர் தினத்தில் வாழ்த்தி வணங்குகிறோம் !



பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 
இசையோ ஓவியமோ தையலோ 
உடற்கல்வியோ எவ்வாசிரியராயினும் சரி ...

தேர்வுற்றதால் தேர்வற்ற முறையில் 
தேர்வாக முயலும் 
தகுதியில் ஆதவன்களான ஆசிரியர்களே!

1325 முழுநேர காலியிடங்களுக்கு 
37900 மாணவர்கள் போட்டியிடும் நிலையில்
கற்கையில் தாமும் மாணவர்களே ! என்று
கற்பித்தும் கற்றும் வரும்
23 செப்டம்பர் 2017 ல் தேர்வெழுதும்
தேர்வுற்ற தேர்வர்களே!

கணினியும் கல்வியியலும் 
கற்றுத் தேர்ந்தும் கணினிப் பயிற்றுநராக 
தேர்வு வரும் நாள் எந்நாளோ ?
வகிக்கும் கணினிப் பயிற்றுநர் பதவி 
நிரந்தரமாகும் நாள் எந்நாளோ ?
என்றேங்கும் ஆசிரியர்களே!

இடைநிலை ஆசிரியரா யிருந்த பலனொடு
கணினி கற்ற பலன் கொண்டு பலமான -
தேர்வின்றி தேர்வாகி முதுநிலை ஆசிரியராகும் 
வாய்ப்பிற் சிறந்த ஆசிரியர்களே!

ஒப்பந்த கணினி ஆசிரியாரக தனியார் வழி வந்து
தேர்வெழுதி பணியிலிருக்கும் ஆசிரியர்களே!
அத்தேர்வினால் பணியிழந்த கல்விமான்களே!

இவ்வகைகளில் எவ்வகை ஆசிரியராயினும் 
கணினிக்கும் எமக்கும் தொடர்பான தங்களை
கண்ணுற்றிருந்தாலும் காணா நட்பாயினும்
கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்
ஆசிரியர் தின வாழ்த்துக்களை வாழ்த்துவதில்
பேருவகை அடைகின்றேன்..

தங்கள்,
சோ.மு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக