பகுதிநேரப் பயிற்றுநர்களின் உண்ணாவிரதப் போராட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பலவித போராடங்களில் பதவியிழந்தும்
சிற்சில தோல்விகளுடன் பதவியிலிருந்தும்
பணியில் போராட்டம் பல கண்டு வருந்தும்
பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வாழ்க்கையும் போராட்டமாகுது !
இது காளையர்களின் காளைப்பிடி போராட்டமல்ல ? ஆசிரிய கர்ப்பிணிகள் பணியைத் தொடர்வதில் போராட்டம் ! எவ்வித விடுப்பும் இன்றி ஊதியமிழக்கும் பகுதிநேரச் சிறப்பாசிரிகளின் உரிமைப் போராட்டம்....
தொலைதூரம் பயணித்து செலவுடன்
உடல் சோர்வும் சேர்ந்து மிரட்டும் நிலைத் தவிர்க்க
போராட்டம்... இது போராட்டம் ....
அசுர வேகத்தில் உயரும் அகவிலைப்படி
அதை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கில்லை எனும்
அரசை கண்டித்து களம் காணும் போராட்டம் .....
மாணவர் எண்ணிக்கை குறைந்திடின்
மகழ்ச்சியுறும் ஆசிரியர்கள் மத்தியில்
பதவி இழந்து பரிதவிக்கும்
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ....
இவ்வரிகளை எழுதும் என் செவிகளில்
பக்கத்து பாலர்ப் பள்ளி பாடல் ஒலிக்கின்றது !!!
'' நான்கு எருது மாடுகள்
ஒன்றாய் வாழ்ந்து வந்ததாம்..!
கூடாய்ச் சேர்ந்தே எருதுகள்
காட்டில் மேய்ந்து வந்தத்தாம்..!
பிடிக்க வந்த சிங்கத்தை..
விரட்டி விரட்டி அடித்ததாம்..!
எருதுகள் ஒன்றாய் இருந்ததால்
சிங்கம் பயந்து சென்றதாம்..!
சிறிய சண்டை வந்ததால்
எருதுகள் பிரிந்து போனதாம்..!
எருதுகள் பிரிந்து போனதால்
சிங்கம் மகிழ்ச்சி கொண்டதாம்..!
தனியாய் மேய்ந்த எருதுகளை
சிங்கம் பிடித்து தின்றதாம்…!''
பாடல் ஒலிக்கையில்.....
இரு முச்சங்கங்கள் என் நினைவலைகளில் வந்தது !
ஒன்று
மதுரையில் முச்சங்கங்கள் தமிழ்
வளர்த்ததென்று - இறையனார் களவியல்
நக்கீரர் உரையில் கற்றது !
மற்றொன்று
கன்னியாகுமரி முதல் சென்னை வரையுள்ள
பகுதிநேரப் பயிற்றுநர்களின் முச்சங்கங்களும்
ஒன்றிணைந்து வள்ளுவர் வழி நின்று
வள்ளுவர் கோட்டம் தன்னில் உண்ணா நோன்பிருந்து
கற்றுக்கொடுக்கப் போவது ....
ஒற்றுமையே வலிமை !
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
போராட்டம்... இது போராட்டம் ....
அசுர வேகத்தில் உயரும் அகவிலைப்படி
அதை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கில்லை எனும்
அரசை கண்டித்து களம் காணும் போராட்டம் .....
மாணவர் எண்ணிக்கை குறைந்திடின்
மகழ்ச்சியுறும் ஆசிரியர்கள் மத்தியில்
பதவி இழந்து பரிதவிக்கும்
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ....
இவ்வரிகளை எழுதும் என் செவிகளில்
பக்கத்து பாலர்ப் பள்ளி பாடல் ஒலிக்கின்றது !!!
'' நான்கு எருது மாடுகள்
ஒன்றாய் வாழ்ந்து வந்ததாம்..!
கூடாய்ச் சேர்ந்தே எருதுகள்
காட்டில் மேய்ந்து வந்தத்தாம்..!
பிடிக்க வந்த சிங்கத்தை..
விரட்டி விரட்டி அடித்ததாம்..!
எருதுகள் ஒன்றாய் இருந்ததால்
சிங்கம் பயந்து சென்றதாம்..!
சிறிய சண்டை வந்ததால்
எருதுகள் பிரிந்து போனதாம்..!
எருதுகள் பிரிந்து போனதால்
சிங்கம் மகிழ்ச்சி கொண்டதாம்..!
தனியாய் மேய்ந்த எருதுகளை
சிங்கம் பிடித்து தின்றதாம்…!''
பாடல் ஒலிக்கையில்.....
இரு முச்சங்கங்கள் என் நினைவலைகளில் வந்தது !
ஒன்று
மதுரையில் முச்சங்கங்கள் தமிழ்
வளர்த்ததென்று - இறையனார் களவியல்
நக்கீரர் உரையில் கற்றது !
மற்றொன்று
கன்னியாகுமரி முதல் சென்னை வரையுள்ள
பகுதிநேரப் பயிற்றுநர்களின் முச்சங்கங்களும்
ஒன்றிணைந்து வள்ளுவர் வழி நின்று
வள்ளுவர் கோட்டம் தன்னில் உண்ணா நோன்பிருந்து
கற்றுக்கொடுக்கப் போவது ....
ஒற்றுமையே வலிமை !
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக