முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

பிப்ரவரி – 16 ஏன் போராட்டம் ? எதற்கு போராட்டம்?

  • இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 ன் படியும், அனைவருக்கும் கல்வி இயக்க பரிந்துரைப்படியும் இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டு, பதினொன்றாம் மாதம், பதினொன்றாம் நாள் அரசாணை 177 வெளிவந்தது. அரசாணை எண் 177 நாள் : 11.11.2011 அதன்படி 16549 முழு கல்வித்தகுதியுடைய பகுதிநேர பயிற்றுநர்கள், தொகுப்பூதியமாக ரூபாய் 5000 என்ற ஊதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டோம். இவ்வரசாணைப்படி தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்கள் உடற்கல்வி, தையல், இசை மற்றும் கணினி போன்ற சிறப்புப்பாடங்களை பயிற்றுவிக்கும் பயிற்றுநர்களாவார்கள்.
  • இதில் B.C.A. B.Ed., B.Sc. B.Ed., ஆகிய படிப்புகளைப் படித்துவிட்டு கணினி பயிற்றுநர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் TNTET -2013 தகுதித்தேர்வினை எழுதி பட்டதாரி ஆசிரியர்களாகும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் இவ்வாண்டு அறிவிப்பு வெளிவந்து கொண்டுள்ள TNTET -2017 தேர்விற்கான தேர்வாணைய அறிவிப்பில், கணினியில் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கானோரின்             ( சுமார் 40,000 பேர் கணினி ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள் ) பட்டதாரி ஆசிரியர் கனவு நனவாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. இந்நிலையை எதிர்த்து போராடவே பி.எட் கணினி பட்டதாரிகள் சங்கம் உருவாக்கப்பட்டு தொடர்ந்து பல நிலைகளில் போராடி வருகின்றது. அப்போராட்டத்தினை பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்கங்களும் ஆதரிக்கின்றன.
  • அரசாணை 177 நாள்: 11.11.11 ன் படி ஊதிய உயர்வில்லை என்று ( No Increment is eligible during the period of service ) கூறப்பட்டிருந்தாலும் உரிய தகுதியையும், அகவிலைப்படி உயர்வையும் கருத்தில் கொண்டு ஒரு முறை ஊதியத்தை உயர்த்தி தொகுப்பூதியமாகவே ரூ. 7000 வழங்கப்பட்டு வருவதை வரவேற்கின்றோம். 
  • ஆனால் அதற்குப்பிறகு பல முறை அகவிலைப்படி சதவிகிதம் உயர்ந்த பொழுதும், ஊதிய உயர்வு அதனைத் தொடர்ந்து உயர்த்தப்படாததை கண்டிக்கின்றோம்.
  • அகவிலைப்படி உயர்வு இல்லை.
  • ஆண்டு ஊதிய உயர்வில்லை.
  • ஊக்க ஊதிய உயர்வில்லை.
  • பணி ஓய்வுப் பெறும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு எவ்வித பணப்பயனுமின்றி, உடனடியாக மனிதாபிமானமற்ற முறையில் விடுவித்து ஆணை வழங்கிட ஒரு ஆணையை வெளியிட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
  • பண்டிகைகளுக்கு போனஸ் இல்லை.
  • பணிநிரவலில் பந்தாடப்பட்டு, போக்குவரத்து செலவிற்கே சில ஆயிரங்களை செலவிட வேண்டிய நிலை தொடருது.பணிநேரத்தை விட பயண நேரம் அதிகமாகும் நிலை, பல பகுதிநேர பயிற்றுநர்களை பாதித்துள்ளது.
  • ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை இல்லை.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தற்செயல் விடுப்பு என்றாலும் ஊதியப்பிடித்தம் செய்யப்பட்டு தினக்கூலிகளைப் போல கேவலமாக நடத்தப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சங்கப் பதிவு இல்லை என்று எண்ணாதீர்கள் 
பாதிப்புள்ளோரே சங்கமிப்பர் என்பதை உணர்ந்து
விரைந்திடுவீர்! சென்னை நோக்கி ..... பிப்ரவரி 16 மறவாதீர் !!

சோ.முத்துராமன்,
பாதிக்கப்பட்டுள்ள உங்களில் ஒருவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக