முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 9 ஜூன், 2016

கணினிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்


பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு அனுப்பினர். அம்மனுவில் கோரப்பட்ட கோரிக்கைகள் விவரம் :

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.

பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு.

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் 39019க்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை:
  • அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு நிகராக).
  • சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிட்ட (6ம் வகுப்பு முதல் 10ம் வரை) பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவை கொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  • அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  • பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
  • மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:புதிய கல்விக் கொள்கை ,டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும்.
"கணினிக் கல்வியை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவர்"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக