முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 22 ஜூன், 2016

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் வெ.முருகதாஸ் அவர்களின் அறிக்கை

அன்புக்குரிய அனைத்து பகுதி நேர ஆசிரியபெருமக்களுக்கு பணிவான வணக்கம். 
கடந்த வாரம் நமது அனைவரும் கல்வி திட்ட இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து பணி நிரந்தரம் குறித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு 10% கொடுக்கபடாதது குறித்தும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை 100 ஏற்க முடியாது என்றும் குறைந்தபட்சம் ஒரு பள்ளிக்கு ஒரு பகுதி நேர ஆசிரியராவது இருக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் கூறியதாவது :
பணி நிரந்தரம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கலுக்கும் சுற்று அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது மீண்டும் அனுப்புவதாகவும் கூறினார்.August மாதத்தில் இருந்து ரூ 1400/- உயர்த்தி வழங்கப்படும் என்றும் 4.அடுத்த வாரத்தில் மனமொத்த மாறுதல் வழங்குவது குறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்படும் பிறகு பொது மாறுதல் வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து மௌனம் காத்தார். 

இப்படிக்கு. 
மாநில தலைவர்
வெ.முருகதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக