வேதாரண்யத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
நாகப்பட்டினம் , வேதாரண்டயத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்ற சனிக்கிழமையன்று ( 27.2.16 ) வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர். நாகை தெற்கு மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கைகளான மே மாத ஊதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, பணி நிரவல் சிக்கலுற்றதால் மீண்டும் ஒரு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வினை நடத்தி, பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிகைக்களை வலியுறுத்தி பேசினர்.
பிறகு கோரிக்கைகளை கோஷமிட்டனர். மாநில அளவில் சென்னையில் மார்ச் 2 ஆம் தேதி நடைப்பெறும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள தீர்மானித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக