முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

கருணை காட்டுவோர் இல்லை, பரிந்துரைப்போர் இல்லை, குமுறலில் பகுதிநேர ஆசிரியர்கள்

- அனைவருக்காகவும் கடலூர் செந்தில் (எ) சி.செந்தில்குமார் (9487257203)
  • G.O.177 ஆணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணிபுரிய இதுவரை வாய்ப்பளிக்கப்படவில்லை.
  • இரண்டாவதாக வெளியிடப்பட்ட G.O.186 ஆணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர்அதிகபட்சமாக இரண்டு பள்ளிகளில் பணிபுரிய வாய்ப்பளிக்கப்படவில்லை.
  • G.O.186 ஆணைப்படி ECS முறையில் மாதத்தின் முதல் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
  • G.O.186 ஆணைப்படி பணிநிரவல் RTE விதிமுறைகளின்படி நடைபெற்றாலும், பணிநிரவலால் தொலைதூரப் பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள் பள்ளிகளுக்கு சென்றுவர கூடுதல் நேர பயணத்தாலும்-பயணச்செலவாலும் 7000 தொகுப்பூதியத்தில் தவிப்பதை தடுத்திட மறுவாய்ப்புகள் இதுவரை ஆய்வுக்குக்கூட எடுத்துக்கொள்ளவில்லை.
  • அரசாணையில் மே மாதம் வேலையும் இல்லை-ஊதியமும் இல்லை என்று ஆணையிடப்படாதபோது சூழ்ச்சியாக இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஊதியங்கள் வழங்கப்படவில்லை.
  • காலஞ்சென்ற பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்கள் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை.
  • தீபாவளி, பொங்கல் போனஸ் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
  • பள்ளிப்பணியில் எல்லா வகையிலும் முழு அளவில் பயன்படுத்தும் பகுதிநேர ஆசிரியர்களை யாவரும் பரிந்துரைக்கவில்லை. ஜாக்டா அமைப்பின் 08.10.2015, 1.2.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
  • முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்த்திட அனுப்பும் கோரிக்கை மனுக்களும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு வருவதால் ஆழ்ந்த கவலையில் செய்வதறியாமல் கடவுளை வேண்டுகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக