முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் 4 சங்கம் போராட்டம் போலீசார் குவிப்பு: பதற்றம் - Thanks Tamilmurasu

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் ஒரே நேரத்தில் 4 சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.பள்ளிக்கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 19ம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கமும் டிபிஐ வளாகத்தில் கடந்த 20ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) 18 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் இன்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே கோஷம் போட்டுவிட்டு கிளம்பி சென்றனர். 

இதனிடையே டிபிஐ வளாகத்தின் தெற்கு பக்க வாயிலில் இருந்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் 300 பேர் உள்ளே நுழைய முயன்றனர்.கடந்த 2012ம் ஆண்டு 16 ஆயிரத்து 300 பேர் அரசு பணிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது முறையாக வழங்கப்படவில்லை. தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 5 கட்டமாக போராட்டம் நடத்தினர். 

இதை அரசு கண்டு கொள்ளாததால், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் டிபிஐ வளாகத்துக்குள் வந்தனர். ஒரு பக்கம் ஜாக்டோவும் மறுபக்கம் பகுதி நேர ஆசிரியர்களும் உள்ளே நுழைந்ததால், போலீசார் யாரை கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறினர்.இதையடுத்து இரண்டு தரப்பினரையும் போலீசார் தனித்தனியாக பிரித்து நிறுத்தினர். பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் அனைவருக்கும் கல்வி இயக்க வாசல் முன்பு அமர்ந்து கோஷம் போட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், ‘முதல்வர் ஜெயலலிதா எங்களை அழைத்து பேசும் வரை உண்ணாவிரதம் தொடரும்’ என்று அதன் தலைவர் முருகதாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக