23.2.2016 அன்று சென்னையில் மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் நம் கோரிக்கை சரியானது என்பதால் நம் மாநில நிர்வாகிகளை SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களை சந்திக்க வைத்தனர் அதில் இயக்குனர் அவர்கள் கூறியது :-
“ உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு. ஆகையால் இங்கு போரடுவதை விட்டுவிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க வைக்க வைய்யுங்கள். தமிழக அரசு நினைத்தால் உங்களை பணி நிரந்தரம் செய்யமுடியும். அப்படி நடக்கும்போது நான் முதல் ஆளாக உங்களுக்கு உறுதுனையாக இருப்பேன் “, என்று கூறினார்.
ஆகையால் நாம் தமிழக அரசை திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும். எனவே நமது ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து வருகிற 02.03.2016 புதன் கிழமை சென்னையில் நடைபெறுகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய மாபெரும் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டத்திற்கு காவல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் அணி திரளாக வருக! வருக!! வருக !!! என்று அழைக்கிறோம்..
இவண்
மாநில நிர்வாகிகள்
please correction the date 02-03-2016
பதிலளிநீக்கு