முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

கிருஷ்ணகிரி உண்ணாவிரதப் போராட்டம் - 27.2.16 தினமலர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் காஞ்சிபுரம் முருகதாஸ், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப நியமிக்கப்பட்ட, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் காலதாமதமாகும் பட்சத்தில், பகுதி நேர ஆசிரியர்களை, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் இருந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற வேண்டும். இந்த கல்வியாண்டு முதல், அனைத்து வேலை நாட்களும் முழு நேரப்பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக