நூறாண்டு பேசும்
ஓராண்டு சாதனைகளில் ஒன்றாக நியமனம் :
ஆகஸ்டு 2011 ல் சட்டப்பேரவை விதி எண் 110 ன் கீழ் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ன் படி தமிழக
அரசுப்பள்ளிகளில் ரூ. 5000 மாத ஊதியத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாக சுமார் 16,500
பகுதிநேர பயிற்றுநர்கள் ( சிறப்பாசிரியர்கள் ) நியமிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் திட்டமான SSA பணியாளரான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக விலைவாசி உயர்வு படி !?! :
விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு, மத்திய அரசு எப்பொழுதெல்லாம்
விலைவாசிப்படி உயர்வு வழங்குகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக அரசும், தனது ஊழியர்களுக்கு வழங்கி வந்தது.
இந்நிலையில், 2011 முதல், பல முறை நிரந்த ஆசிரியர்களுக்கு
விலைவாசிப்படி உயர்வு மற்றும் போனஸ் வழங்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக ஊதிய
உயர்வின்றி தவித்த நம் மீது அம்மாவின் கருணைப் பார்வை பட்டதன் விளைவாக, 2014 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் தொகுப்பூதியத் தொகை சற்று உயர்த்தப்பட்டு ரூ. 7000 ஆக
வழங்கப்பட்டது.
தொகுப்பு ஊதிய பகுதிநேர தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு
பணிநிரவலால் பாதிப்பு :
தற்போது, பணி நிரவலால் தொகுப்பு ஊதிய பகுதிநேர தற்காலிக பயிற்றுநர்கள்
(சிறப்பாசிரியர்கள்) தொலைதூரப் பள்ளிகளுக்குச் சென்று பணிபுரிவதால் பயணக் களைப்பு
வாட்டி வதைப்பது மட்டுமல்லாது பயணச்செலவு அதிகரித்தது மற்றும் பயணநேரம்
அதிகரித்தது ஆகிய காரணங்களினால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பகுதிநேர பயிற்றுநர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் :
நம் தமிழக அரசு, இந்த இடைக்கால பட்ஜெட் 2016 – 17 ல் பணி நிரந்தரம் செய்து
காலமுறை ஊதியம் வழங்கி, நம் வாழ்வாதாரத்தை உறுதி செய்து பணிநிரவல் உள்ளிட்ட
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் என்று எண்ணிய பகுதிநேர பயிற்றுநர்களுக்கு
ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
“பலனளிக்க வில்லை ...
பலனளிக்க வில்லை ... இப்பட்ஜெட் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு பலனளிக்க வில்லை” என கோரிக்கை முழக்கமிட்டு போராடும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக