முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 13 பிப்ரவரி, 2016

கடலூர் மாவட்டத்தில் 14.02.2016 அன்று காலை 8 மணி மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்

கடலூர் மாவட்டத்தில் 14.02.2016 அன்று காலை 8 மணி மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் உண்ணவிரதத்தில் இது நாள் வரை உயிரிழந்த நம் 40 நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்வது என்றும் மேலும் இரங்கல் கூட்டத்துடன் கூடிய உண்ணாவிரதமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் ஆழ்ந்த வருத்ததிதுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் எத்தனை உயிர்களை பறிக்கப்போகிறது தமிழக அரசு? மாற்றுத் திறனாளிகள் போராடினார்கள் அரசு அழைத்து பேசுகிற்து நாம் போராடாமல் எப்படி வெற்றி பெற முடியும் சிந்தியுங்கள் ஒன்றுபட்டு போராட அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களை அழைகின்றோம். இனி நம்மில் எவரும் இறக்காமல் இருக்க ஒன்றுபட்டு கோரிக்கையினை வென்றெடுக்க போராடுவோம்.

அனைவரும் வருக!!!
ஒற்றுமையே பலம்!!!!
மாவட்ட நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக