திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்ட மனு: 2016ஆம் ஆண்டுக்கான பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் முதுநிலை ஆசிரியர்கள், அவர்கள் விரும்பிய விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்துக்கு உரிய பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை வள்ளியூரில் ஏதாவது ஒரு மேல்நிலைப் பள்ளியில் அமைக்க வேண்டும்.
பிப்ரவரியில் நடைபெற உள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வில் முதுநிலை ஆசிரியர்களைப் புறத் தேர்வாளராக நியமனம் செய்வதற்கு கல்வி மாவட்ட வாரியாக தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணி தொகுதியில் மூத்த முதுநிலை ஆசிரியர்களைக் கொண்டு பாடவாரியாக குழு அமைத்து செய்முறைத் தேர்வுப் பணி வழங்க வேண்டும்.
புறத்தேர்வாளராக மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது.
திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி ஆகிய கல்வி மாவட்டங்களில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் குறைதீர்க் கூட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக