முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பணிநிரவலில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு பாதிப்பு

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களை மாணவர்கள் எண்ணிக்கையை காரணங்காட்டி, அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். அவ்வாறு செய்யும் பொழுது , பயணத் தூரம் மற்றும் பயணம் செய்ய ஆகும் செலவு பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளவில்லை. பகுதி நேர பாடப் பிரிவுகளில், காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இதில் ஒவ்வொரு ஆசிரியரும், 70 கி.மீ., நீண்ட துாரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு நாளைக்கு மூன்று மணி நேர வேலைக்கு சுமார் ஆறு மணி நேரம் வரை பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பகுதி நேரம் போக மீதி நேரம் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஏன் குடும்பத்தையே பிரிந்து வாடகைக்கு அறை எடுத்து தங்குபவர்களும் உண்டு. வாடகை என்றால் செலவு சுமார் மூவாயிரத்தைத் தாண்டுகிறது. தினமும் சென்று வருவதிலும் பல கஷ்டங்கள் உள்ளது. அதுநிற்க ! சிலருக்கு பள்ளிகள் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஆங்காங்கே எழுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக