முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை

"திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் மற்றும் சுப்ரமணியர் தேர் திருவிழா வெள்ளோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, தமிழக அரசின் நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை) துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி, திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை நாளான அக். 26-ல் அரசு கருவூல மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்' என ஆட்சியர் எம். மதிவாணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக