பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வாலாஜாபாதில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்து ஆசிரியர்கள் போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கடந்த 3 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக