முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

நமது சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் அறிக்கை

22.08.15 அன்று மதுரையில், நம் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், சேர்மன் திரு. சோலைராஜா அவர்களின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு திரு. சேசுராஜா, திரு.முருகதாஸ், கோவை ராஜா, திரு. ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 
  • பணிநிரவலில் உள்ள குறைகளை அமைச்சர்கள் மற்றும் இயக்குநரிடம் நாளை ( 24.8.15 ) முறையிடுவது. 
  • நம் கோரிக்களை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், கவன ஈர்ப்பு பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது. 
  • மேற்கண்ட பேரணியில் அனைத்து ஆசிரியர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, மாவட்ட நிர்வாகிள் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது. 
  • அப்படியும் கோரிக்கைள் நிறைவேறவில்லை எனில், செப்படம்பர் மாதம் 21 ம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டது. 

அனைவரும் பங்கேற்போம் ! 

நமக்காக நாமே பங்கேற்போம் ! 

போராடுவோம் ! வெற்றி பெறுவோம் ! 

வெற்றி பெறும் வரை போராடுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக