அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ன் படி பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக, பணியிடமாறுதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இருந்து வருகின்றன.
இக்கோரிக்கைகளில் ஒன்றான, பணியிடமாறுதல் அருகமை பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்று, அதற்கான உத்தரவு மற்றும் அரசாணைகள் வெளியாகி வருகின்றன.
நமது சங்கங்களின் கூட்டமைப்பபின் கோரிக்கையை ஏற்று ஆணையிட்ட, மாண்புமிகு முதல்வர், நிதியமைச்சர், கல்வியமைச்சர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னல்களை பொருட்படுத்தாது, அயராது பாடுபட்டு வரும் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கும், செய்தித்தொடர்பாளர்களுக்கும் எமது இடுகைத்தளத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக