முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 27 ஜூலை, 2015

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு - பாடசாலை

ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை தொடங்கி 3 நாட்களில் பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர். 

அதன் பேரில் மேற்கண்ட பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இதற்கான பாடத்திட்டம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் இசைப் பாடத்துக்கு 5, ஓவியப்பாடத்துக்கு 8, தையல் பாடத்துக்கு 7, உடற்கல்வி பாடத்துக்கு 5 பேர் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நாளை முதல் 30ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் மேலா ண்மை பயி ற்சி நிறுவன ஆய்வுக் கூடத்தில் பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக