அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களின் விவரங்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை
குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்கள் வேறு பள்ளிக்கு பணி நிரவல்
முறையில் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான கடிதம் மாநில திட்ட இயக்குநர்
அவர்களிடமிருந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், அனைவருக்ககும் கல்வி
திட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கான
படிவங்களை அந்தந்தப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால்
கோரப்பட்டு வருகின்றது.
இவ்விவரங்கள் 1.9.2014 ல் பெறப்பட்ட விவரங்களுடன் ஒப்பிட்டு
பார்க்கப்பட்டு, பணிநிரவல் நடைப்பெற உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து பணிக்கு செல்லாத
பகுதிநேர பயிற்றுநர்கள் பணியிலிருந்து விடுக்கப்படவுள்ளனர்.
எந்தெந்த மாவட்டங்களின்
கண்காணிப்பாளர்கள் எந்த தேதியில் சென்னையில் விவரங்களை கொடுக்க வேண்டும் என்பதை கீழ்க்கண்ட
அட்டவணை வாயிலாக அறியவும்.
இடைத்தேர்தலுக்கு முன், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் என்று சங்கத்தினர் சொல்லவில்லையே ! ?
பதிலளிநீக்குஊதிய உயர்வாணை SSA budget ல வருமா ? வெறும் பணியிட மாறுதல் மட்டுந்தானா?