முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 11 மே, 2015

பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது 'ஆதார்'

பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை, கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, 'ஆதார்' திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது:

'ஆதார்' எண்ணை உருவாக்க, நிரந்தர மையம், பகுதி வாரியாக முகாம்கள் நடத்துவதோடு, சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினருக்கு, 'ஆதார்' எண்ணை உருவாக்க, பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிலாளர் அதிகம் உள்ள அலுவலகங்களில், 'ஆதார்' எண் பதிவு செய்ய, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தத்திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரிடம், மாணவர் எண்ணிக்கை விவரம், அதில் ஆதார் எண் இல்லாதோரின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு உள்ளோம். இந்த, விவரங்களைப் பெற்றவுடன், பள்ளி, கல்லூரிகளில்சிறப்பு முகாம் நடத்தப்படும். நூறு சதவீத மக்களுக்கும், 'ஆதார்' எண் உருவாக்கவேண்டும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தனித் தனியாக, முகாம்கள் நடத்தப்படுகின்றன. 'ஆதார்' எண் அளித்தால் மட்டுமே, கல்வியைத் தொடர முடியும் என்ற, நிர்பந்தம் எதுவுமில்லை. 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டு, கல்வி சலுகைகள் அளிக்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக