- ஏழுமலை பாண்டியன்
கடந்த 2012ல் உருவாக்கபட்ட 16, 545 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகி வருகின்றன. இதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்காக வழங்கும் நிதி வீணாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காலியான பணியிடங்களை நிரப்ப அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில், பகுதிநேர ஆசிிரயர்களாக பணியில் இருந்தவர்களில், இறந்தவர்கள்....
தகுதி தேர்வில் நிரந்த ஆசிரியர் பணிக்கு சென்றனர்கள்...
கடந்த மாதம் முதுகலை ஆசிரியர் பணிக்கு சென்றவர்கள்..
இன்று(04:04:15) நிரந்த கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள்....
என்று இந்த பட்டியலில் இடம் பிடித்த பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை 2000 ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பது போல், அடுத்து வர உள்ள தகுதிதேர்வில் மேலும் பலர் நிரந்தர ஆசிரியராக பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், காலியாக உள்ள அல்லது காலியாகி வருகின்றன பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. இதனால், மாணவர்களின் கலையறிவை வளர்க்கும்விதமாக ssa திட்டத்தின் கீழ், ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் குறைந்து வருவதால், திட்டத்தின் நோக்கம் நிறைவடையாத நிலை ஏற்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக