முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 4 ஏப்ரல், 2015

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் 500க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை : மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி - ஜெயா பிளஸ்

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், கணினி பயிற்றுநர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இன்று, ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்த வழிகாட்டிய மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பணி நியமன ஆணை பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்களுக்கு, பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், மாவட்டந்தோறும் இன்று ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்குள்ளே இடம் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற கலந்தாய்வில், 490 பேர், தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, மாவட்டம் விட்டு பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில், தங்களுக்குரிய இடங்களைத் தேர்வு செய்தோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு பணி ஆணை வழங்க, தமிழக அரசுக்கு வழிகாட்டிய மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்தனர். 

முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருப்பதால், அவர்களுக்குரிய நியமன ஆணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், நீதிமன்ற ஆணைக்குப் பின்னர், அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக