முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஏப்ரல் 19-ல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – தி இந்து

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

மாநிலப் பொருளாளர் நம்பிராஜ், துணைத் தலைவர்கள் எழிலரசன், ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து, ஆண்டுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், வருமான வரி விலக்குத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தல் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக