மத்திய அரசால் சென்ற வருடம் அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 27758 கோடி, இந்த வருடம் 20% குறைத்து 22000 கோடி மட்டுமே நிதி ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தமிழ் நாட்டில் 2017 ஆண்டு திட்டம் நிறைவு பெறும் நிலையில் இது வரை நீடிப்பு எதுவும் செய்யபடாத சூழ்நிலையில் ஆசிரியர் பயற்றுநர்களின் நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட தலைமை அதிகாரிகள் எடுக்கும் முடிவு என்ன?
RMSA உடன் இணைக்க படலாம் என கூறபட்ட நிலையில் மத்திய அரசு சென்ற வருடம் RMSA க்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 30% குறைத்து 3565 கோடி இந்த வருடம் ஒதிக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசின் திட்டமான 6000 மாதிரி பள்ளிகள் திட்டத்தின் கீழ் சில மாதிரி பள்ளிகள் துவங்கபட்டுள்ளது. இதில் ஆசிரியர் பயற்றுநர்கள் பணி அமர்த்தபடலாம் என கூறபட்ட நிலையில் இந்த வருடம் இத் திட்டத்திற்க்கான நிதி ஒதிக்கீட்டை முழுமையாக நீக்கியது மத்திய அரசு. இதற்க்கான முழு நிதி ஒதிக்கீட்டை மாநில அரசு மேற்கொண்டு 6000 மாதிரி பள்ளிகள் திட்டம் நிறைவு பெறுவது கேள்வி குறி ஆகிஉள்ளது.
மூன்று ஆண்டுகளாக பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மறுக்கப்பட்டு புது புது அரசாணைகளால் ஆசிரியர் பயற்றுநர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. சட்டத்தின் தீர்ப்பும் சங்கத்தின் கோரிக்கைகலும் நிரகரிக்கபட்டு இனி வரும் காலங்களில் எந்த அரசாணை மூலம் எப்போது என்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது ஒரு ? .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக