முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 16 மார்ச், 2015

கோவையில் நேற்று நடந்த மாவட்ட பொதுக் கூட்டம் - விவரம்

கோவையில் 15-03-2015 அன்று தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு திரு. ர. ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் திரு. சுதாகர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை அமைப்பாளர் திரு.ஜா.ஆனந்தராஜ் இதுவரை நடந்த சங்கத்தின் செயல்பாடுகளை கணினிப் படக்காட்சி மூலம் திரையிட்டு விளக்கமளித்தார். மாவட்டச்செயலாளர் திரு. சீனிவாசன், மாவட்டத் துணைச்செயலாளர் திரு. தியாகராஜன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்து நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர். மாநில அமைப்பாளர் திரு. கு. சேசுராஜா மற்றும் மாநில துணை அமைப்பாளர் திரு.ஜா.ஆனந்தராஜ் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் திரு. ராஜா தேவகாந்த் பாராட்டுரை வழங்கினார். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சேர்மன். திரு. சோலை M ராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

சிறப்புரை விபரம் :

தமிழகத்தில் பணியமர்த்தப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு 
  • தொகுப்பூதியம் ரூ.5000த்திலிருந்து ரூ.7000மாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
  • ஊதியத்தை இ.சி.எஸ். முறையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • நிலுவைதொகை ரூ.12,000 ஒவ்வொரு மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
  • மாவட்டத்திற்குள் தகுதியானவர்களுக்கு பணிமாறுதல் வழங்கப்படுகிறது.
  • மிக முக்கியமாக தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து பணிநிரந்தரம் செய்ய விதிகளுக்குட்பட்டு ஆவன செய்வதாக கல்வித்துறையால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ,சில வேண்டத்தகாத சக்திகள் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மேன்மைக்காகச் செய்யப்படும் கடும் முயற்சிகளுக்கு தடைபோடும்விதமாக சட்டவிரோதமாக சங்கத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது செய்தித்தாள்களிலும் வந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.திநேர ஆசிரியர்களும் துணைபோகின்றனர். எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் யாரும் இதற்குத் துணைபோகவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்நிலை தொடர்ந்தால் அரசு நம்மைக் கண்டுகொள்ளாத நிலை ஏற்படலாம். 

எனவே நிலை உணர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும். எனினும் சங்கத்தின் நேரிய முயற்சிகள் தொடரும் இவ்வாறு அவர் கூறினார்.

இறுதியாக மாவட்டப் பொருளாளர் திருமதி. எலிசபெத் ராணி நன்றியுரை கூறினார்.

பொன். சங்கர் - மாநில செய்தித் தொடர்பாளர், தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக