முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 7 மார்ச், 2015

பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - ஜி. கே. வாசன்

ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கை அரசு நிறைவேற்ற வேண்டும்: வாசன்
- தினமலர்

சென்னை: 'தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்' என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: 

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 

தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். 

தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் தையல் ஓவியம் உடற்கல்வி இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் 16549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் 2012ம் ஆண்டு நேர்முக தேர்வு மூலம் பணியில் சேர்ந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை போட்டி தேர்வு நடத்தி அவர்களை பணி நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சில ஆண்டுகளுக்கு முன் போட்டி தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் 652 பேரை தேர்வு செய்தது. பின்பு போட்டி தேர்வில் கேள்விகள் சரியானதாக இல்லை எனக் கூறி அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே ஆசிரியர்களை தகுதி தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற 15 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத்தோடு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுகாண வழிவகுக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக