முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 2 மார்ச், 2015

5.50 லட்சம் லேப் - டாப் கொள்முதல்: பணியை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.கடந்த, 2011 - 12ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்கல்லூரிகளில், 8.67 லட்சம் மாணவர்களுக்கு, இலவச, 'லேப்-டாப்'கள் வழங்கப்பட்டன. 
அடுத்து, 2012 - 13ல், 7.18 லட்சம்; 2013-14ல், 5.30 லட்சம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

இதுவரை, 21.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, 2,781.75 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டும், அடுத்த ஆண்டும், தலா 5.50 லட்சம், 'லேப்- டாப்'கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.நடப்பாண்டுக்கு, 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.50 லட்சம், 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி, எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டப் பணி குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது, கொள்முதல் பணியை விரைவாகமுடித்து, விரைவாக மாணவர்களுக்கு, 'லேப்-டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கும்படி,அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப செயலர் ராமச்சந்திரன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக