முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 23 மார்ச், 2015

ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற பேரணிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆனால், அதன் பிறகும், தமிழக அரசு சார்பில் யாரையும் அழைத்துப் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து, அடுத்தகட்டமாக, ஏப்ரல் 19-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக