இடைநிலை ஆசிரியர்கள் பலர் கணினி கல்வியில் பட்டம், முதுகலைப்பட்டம் மற்றும் கல்வியியல் ஆகிய பாடங்களை பயின்றுள்ளர். இவர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியம் மட்டுமே பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். முகநூல், வாட்ஸ் அப் மூலமாக இவ்வாசிரியர்கள் தாங்கள் பயின்ற கணினி படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் பெற அரசாணை இதுவரை ஏதும் வெளிவந்துள்ளதா? என்ற வினாவினை எழுப்பியுள்ளனர். அரசாணை வெளிவந்திருப்பின் அவற்றை இணையத்தில் வெளியிட வேண்டுகிறோம்.
இடைநிலை வகுப்புகளுக்கு பிரிவேளைகள் குறைவு என்று காரணங்காட்டி, பகுதி நேரமாகவே, சொற்ப ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பகுதிநேர கணினி பயிற்றுநர்கள் மற்றும் பல இடைநிலை ஆசிரியர்களும் கணினி பாடம் கையாள்வதற்கு தகுதி பெற்றுள்ளது தமிழக அரசிற்கு வரப்பிரசாதமாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக