பதிவு செய்த நேரம்:2015-02-25 10:53:09 - Dinakaran
கோவை, : தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) - கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட போராட்ட ஆயத்தக் கூட்டம் கோவை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ராஜசேகரன் வரவேற்றார். ஜாக்டோ தொடர்பாளர் ஆனந்தன் தலைமைதாங்கினார். கூட்டத்தில்,
- மத்திய அரசு ஊதியம் போல் தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் சமமாக வழங்கவேண்டும்.
- தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றாக ரத்து செய்தல் வேண்டும்.
- ஒப்பந்த அடிப்படையிலும் தொகுப்பூதியத்திலும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுக்க வேண்டும்.
- ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- தமிழக அரசின் 14 வகை நலத்திட்டங்களுக்கு தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும்.
- தாய்மொழிவழிக் கல்வியினை உறுதி செய்திட தமிழ்ப் பாடத்தை முதல்பாடமாக வைக்க வேண்டும்.
- 30 ஆண்டுகள் பதவி உயர்வின்றி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
- பதிவு மூப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர்கள் நிலை 1 நியமிக்க வேண்டும்.
- தகுதித் தேர்வினை நீக்கிட வேண்டும் உட்பட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
மார்ச் 8ம் தேதி ஜாக்டோ
சார்பில் 32 கல்வி சங்கங்கள் ஒன்றிணைந்து,
10 ஆயிரம் ஆசிரியர்களை கொண்டு மாபெரும் கவன
ஈர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில்,
ஜாக்டோ அமைப்பின் பாலகிருஷ்ணன், மைக்கேல்ராஜ், செந்தில்குமார், சிவக்குமார், அரசு, சாந்தி, கருப்புசாமி,
மயில்சாமி, பகத்சிங், சிவக்குமார், செந்தூரன், ஸ்ரீதர் உட்பட 32 கல்வி
சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில், நிதிக்காப்பாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக